search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்
    X

    கைதான 4 பேரை படத்தில் காணலாம். 

    கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்

    • கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியார்சாலையில் உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    மாலையாபுரம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த ஒரு தரப்பினர் கல்லூரி மாணவர்களிடம் தகராறு செய்து அவர்களை துரத்திச் சென்று சரமாரி யாக தாக்கினர்.

    கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ராஜபாளையத்தில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி கூறியதை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதோடு மட்டுமின்றி அன்றிரவே கல்லூரி மாணவர்களை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. ஆனால் அவர்களை போலீசார் விடுவித்ததாக கூறி மீண்டும் நேற்று காலை ராஜபாளையம் முடங்கியார் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலை மறியலால் ராஜபாளையத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் வெளியிட் டுள்ள செய்தி அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ராஜபாளையம் சோமையாபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் சதீஷ் (வயது19). இவருக்கும் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராசு மகன் (21) என்ப வருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் செல்வம் தரப்பினர் சதீஷ் மற்றும் அவரது தரப்பினரை தாக்கினர். இது தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அழகுராஜ் மகன் அமர்நாத்(21), கந்தசாமி மகன் கார்த்தீஸ்வ ரன்(25), ராசு மகன் செல்வம், ராஜேந்திரன் மகன் அருண்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட சோமையாபுரத்தை சேர்ந்த தங்கபழம், சடைபாண்டி, ஜமீன்தார், மலை ராஜா, வெள்ளை யம்மாள், அவ்வம்மாள், பாண்டியராஜ், சின்ன இருளாயி, விக்டோரியா, இதயக்கனி, ஜாக்குலின், கருப்பையா, வரதன், லிங்கராஜ், முனியசாமி, செல்லக்கனி, முத்துமணி ஆகிய 17 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×