என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அரசின் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாநிலம் முழுவதும் தடைசெய்தது. இதனைத் தொடர்ந்து
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு காலமுறைக் கடன்களுக்கு மட்டும் 50 சதவீத நிவாரணத் தொகையை அரசு அறிவித்திருந்தது.
தற்போது பல்வேறு தொழில் அதிபர்கள், சங்கத்தி னர்களின் வேண்டு கோளுக்கி ணங்க மேற்கண்ட நிவாரணத்தொகையை வழங்குதில் மேலும் சில தளர்வுகளை அளித்து மார்ச் 2023-ல் திருத்திய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த தடைக்காலத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் காலமுறைக் கடனாக பெற்றிருந்த நிலுவைத் தொகையில் 50 சதவீதத்தை அரசிடம் நிவாரணமாக பெறுவதற்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டு கோள் விடுக்கப் பட்டுள்ளது.
1.1.2019 அன்றுள்ள படி நடைமுறை மூலதன கடன் தொகையிலும் நிலுவையில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை நிவாரணமாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடிக்கப்பட்டிருந்தால் அந்த நிறுறுவனத்தின் உரிமையாளர் பெயரில் உள்ள தனிப்பட்ட வங்கி கணக்கில் நிவாரணத்தொகையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிவா ரணம் வேண்டும் நிறுவனம் பங்குதாரர் நிறுவ னமாக இருந்தால் இதரப் பங்குதாரார்களின் தடை யின்மை சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் நிவாரணத் தொகையானது ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் அரசு வகுத்துள்ள நிபந்தனை களுக்குட்பட்டு வழங்கப்படும்.
ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடையினால் எந்திரங்களுக்கான காலமுறைக்கடன் தொகையில் மட்டும் நிவாரணம் பெற்ற நிறுவ னங்கள் இந்த சலுகையினை பயன்படுத்தி நடைமுறை மூலதன கடன் தொகைக்கும், 50 சதவீத தொகையை நிவாரணமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த அரசா ணையின்படி நிவாரணத்திற்கு 14.6.2023-ந்தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரிலோ அல்லது 90800 78933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்