search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
    X

     சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்.

    திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

    • ஸ்ரீவில்லி. திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
    • இதிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே ஆண்டாள் கோவி லின் உப கோவிலான பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்த கோவிலில் கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    இதற்காக அதிகாலை நான்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அலங்கார ஆராதனைகள் நடை பெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர் முன்னதாக கோவில் அடிவாரத்தில் உள்ள கோனேரி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடியும், கால்களை அனைத்தும் அங்குள்ள ஆதி விநாயகர் மற்றும் நாகர் சிலைகளை வழிபட்டு ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய சென்றனர்.

    அங்கு பக்தர்களுக்கு துளசி கற்கண்டு மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது இதை அடுத்து அலர்மேல் மங்கை தாயார் சன்னதி மற்றும் வேணுகோபால சன்னதி ஆகிய இடங்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழ மையை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    இதே போல் பக்தர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதி களும் செய்து தரப்பட்டு இருந்தன. மேலும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளிலும், திரு வண்ணாமலை கோவிலி லும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    Next Story
    ×