search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சம்
    X

    மரம் சாய்ந்து விழுந்ததில் திருச்சுழி சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து சேதம டைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சம்

    • மரம் சாய்ந்து விழுந்து சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்-மக்கள் அச்சமடைந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி போலீஸ் நிலையத் தின் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகி றது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்க ளாக திருச்சுழி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான வாகை மரம் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது.

    இதைப்பார்த்த பத்திர பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மரம் விழுந்ததில் சார்பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் முற் றிலும் சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை.

    இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சார்பதிவா ளர் அலுவலகத்தில் விழுந்து கிடந்த மரத்தை எந்திரத்தின் உதவியோடு அறுத்து அப்பு றப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தால் திருச் சுழி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதி களில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

    Next Story
    ×