search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச மருத்துவ முகாம்
    X

    இலவச மருத்துவ முகாமை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இலவச மருத்துவ முகாம்

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • மற்ற நோய்களை போல் தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பெ.புதுப் பட்டியில் மாவட்ட நிர்வா கம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது பொதுமக்களி டையே மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான 40 வயதிற்கு மேற்பட்ட வர்களை பரிசோதனை செய்ய வசதியாக அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் சுமார் 40ஆயிரம் பேருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மற்ற நோய்களை போல் தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவற்றை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில்ம் இருதயம், கண், சிறுநீரக உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புக்கும் அளவிற்கான விளைவுகள் உள்ளது.

    எனவே 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், இது போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாமை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×