search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    கோபாலபுரம் ஊராட்சியில் பருத்தியில் ஊடு பயிராக உளுந்து, துவரை பயிரிடப்பட்டிருப்பதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத் தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    கோபாலபுரம் ஊராட்சி யில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித்திட்டம், கூடங்குளம் அனல் மின் நிலைய சமூகபொறுப்பு நிதியின் கீழ் ரூ.12.80 லட்சம், ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் ரூ.5.80 லட்சம் ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி குழந்தை கள் மையத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.

    ேமலும் காரீப் முன் பருவத்திற்கான பயிற்சி பெற்ற விவசாயியின் நிலத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரில், ஊடு பயிராக பயிரிடப்பட்ட உளுந்து மற்றும் துவரை பயிர்களை ஆய்வுசெய்தனர்.ராமனுஜபுரம் ஊராட்சியில் கொண்டிசெட்டி ஊரணியில் ரூ.13.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மற்றும் குளியல் படித்து றையை பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×