search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி கடைசி வெள்ளி திருவிழா
    X

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி கடைசி வெள்ளி திருவிழா

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெறுகிறது.
    • நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து வழிபாடு செய்வார்கள்.

    இந்த கோவிலுக்கு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாக ஆடி வெள்ளி திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை வீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் எஸ்.பி தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×