search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: கலெக்டர் ஜெயசீலன்
    X

    கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: கலெக்டர் ஜெயசீலன்

    • கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
    • ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் - நென்மேனி - நாகாலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில், 8 கி.மீ. தொலைவில் பக்தர்கள் சிரமமின்றி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர் சாத்தூர் நகராட்சியில் எம்.ஏ.சி பூங்காவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து சிவகாசி அனுப்பங்குளத்தில் மின்வாரிய பணிகளையும், சிவகாசி ஆணையூர் பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், மல்லியில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பாக்கியலட்சுமி, உதவிக் கோட்ட பொறியா ளர்கள்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆனந்த குமார், அபிநயா, நிர்வாக பொறியாளர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×