என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை
- இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது.
- எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும்.
விருதுநகர்
சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டு தலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது எடைய ளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரை யிடாமல் வியாபார உப யோகத்தில் வைத்திருந்த ஒரு வியாபாரி மீதும், எடைய ளவுகள் மறுமுத்திரை யிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 19 மீதும், தராசின் எடையை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 2 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மறுமுத்திரையிடப்படாத 8 மின்னணு தராசுகள், 1 சி விட்ட தராசு, 2 மேசைத் தராசுகள் மற்றும் 20 இரும்பு எடைக்கற்கள் தெருவோர வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்ட முறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
இறைச்சி, மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 22-ந் தேதி மேற்கொள்ளப்படும். எனவே இறைச்சி மற்றும் மீன் கடை வணிகர்கள் எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவ டிக்கையை தவிர்க்க வேண்டும்.
நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்), 1/13சி ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட கலெக்டர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், செல்வராஜ், பாத்திமா, துர்கா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இணைந்து இந்த கூட்டாய்வை மேற்கொண்டனர்.
இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்