search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு
    X

    விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எதிர்ப்பு

    • விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கஞ்சம் பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராணி தலைமை தாங் கினார். துணைத் தலைவர் அருமை நாயகம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங் கியதும் ஊராட்சி மன்ற செயலாளர் கிராம வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.

    இதனைத் தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சி, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங் கள் பகுதியில் உள்ள குறை கள், மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்து எடுத் துரைத்தனர்.

    பின்னர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கிரா மத்தின் சுற்று பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது வரை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை அழிக்கும் நோக்கில், தங்க ளது சுயலாபத்திற்காக சில விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளை மீறி வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்ற னர்.

    இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டு மின்றி நிலத்தடி நீரும் பாதிக் கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எவ்வித அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தனது கோரிக்கை மனு வழங்கினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×