என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வராததால் மக்கள் திண்டாட்டம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வராததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் இதன் காரணமாக ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சிக்கு 29 கோடி செலவில் கூட்டுக் குடிநீர்திட்டப் பணிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 60 லட்சம் குடிநீர் கொடுப்பதற்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவே கூட்டுக் குடிநீர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாக ஸ்ரீவில்லி புத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் சரிவர வராததால் நகரில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக அதி காரிகள் உடனடியாக தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.