search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்-கலெக்டர் வலியுறுத்தல்
    X

    ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்-கலெக்டர் வலியுறுத்தல்

    • ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
    • விருதுநகர் கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழு வில் 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

    விருதுநகர், ராஜ பாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்க ளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்கள், பரி வர்த்தனை செய்ய பரிவர்த் தனை கூடங்கள், ஏல நட வடிக்கை மேற்கொள்ள தேவையான ஏலக் கொட்டகைகள் மற்றும் சிறுதானிய விளை பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் பரிவர்த்தனைக் கூடங்களை பய ன்படுத்திக்கொள்ளலாம்.

    2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறி விக்கப்பட்டு, கொண்டா டப்பட்டு வருவதால் விவ சாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து அறுவடை செய்த மக்காச்சோளம்,கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பணிவரகு, தினை போன்ற சிறு தானி யங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைத்திட மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள அனைத்து வசதிகளை யும் முழுமையாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×