என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது
- சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
- தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.
முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.
போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்