search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்
    X

    அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வழங்கினார். அருகில் கலெக்டர் ஜெயசீலன் உள்பட உள்ளனர்.

    கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்

    • கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,626 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக 1,739 மாணவர்க ளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ-மாணவி களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்ப டையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் 7,699 மாண வர்களுக்கும், 9,982 மாணவி களுக்கும் என மொத்த 17,681 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1207 மாணவர்கள், 1378 மாணவிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 850 மாணவர்கள், 1191 மாணவிகள் என 4626 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) முத்துக்கழுவன், நகர்மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக்கோட்டை), குருசாமி(சாத்தூர்), ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர்கள் சசிகலா(அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரைராஜ்(சாத்தூர்) உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிகள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×