search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கம்: அமைச்சர் தகவல்
    X

    அரசு கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு குத்துவிளக்கு ஏற்றினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி, நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கபாண்டியன், அசோகன் உள்ளனர்.

    தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கம்: அமைச்சர் தகவல்

    • திருச்சுழியில் தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
    • புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி வகுப்பறைகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி அசோகன், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி, மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    திருச்சுழி சட்டமன்ற தொகுதி மக்களின் 11 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி உள்ளது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். உயர்கல்வியில் இந்த பகுதி முன்னேறுவதற்கு இந்த கல்லூரி உறுதுணையாக இருக்கும்.

    தற்போது 230 இளங்கலை படிப்பிற்கு கிட்டத்தட்ட 1139 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதை வைத்தே இந்த பகுதியில் உயர்கல்விக்கு தேவை அதிகம் என்பதை உணர முடிகிறது. அடுத்தாண்டு இந்த பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் மணிமாறன், முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி யூனியன் தலைவர் சுப்பாராஜ்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×