search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
    X

    மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

    • சென்னையில் நடைபெறும் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
    • அனைத்து வகை பொருட்களையும் காட்சிப் படுத்தி விற்பனை செய்யலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு நிர்வாக பயிற்சி, நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம் பாட்டு பயிற்சிகள் (தொழில் முனைவோர் பயிற்சி) அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில் முனைவோர்களாகி சுய தொழில் செய்து வருகின்ற னர்.தற்போது சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைபடுத் தும் வகையில் பல்வேறு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை சென்னை தீவு திடலில் மண்டல அளவிலான சாராஸ் மேளா என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது.

    இந்த கண்காட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகை பொருட்களையும் காட்சிப் படுத்தி விற்பனை செய்ய அரிய வாய்ப்பு அளிக்கப்படு கிறது.

    எனவே இந்த கண்காட்சி யில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் பெயர், முகவரி, உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரம் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை வருகிற 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04562-252036, அலைபேசி எண்: 98654 59842 தொடர்பு கொள்ள லாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×