search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் வெளியுட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட் டி ன்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர வங்கிகள், நகர கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஆ ள் சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

    தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து vnrtrb.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற டிச.1-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.

    வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம், பல்கலை கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்க ளில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல்வழி பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு சான்று கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக் கான வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு, பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கணக்கியல், கணினி அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

    எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். ஒட்டுமொத்த மதிப்பெண், இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.

    Next Story
    ×