என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழிலாளர்கள் பதிவு செய்ய வேண்டும்
- வீட்டு வேலை செய்யும் தொழிாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.
- அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கட்டுமானத்தொழிலாளர் நலவாரியம், உடலுழைப்பு நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் இதுவரை பதிவுசெய்யாத வீட்டுப்பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட இணைய–தளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க இயலாத வீட்டு பணியாளர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பள்ளி மாற்று சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.