என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
யோக நரசிம்மப்பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு
- வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
- ஆண்டாள், ஆழ்வார்களும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லத்தில் புகழ்பெற்ற பெற்ற யோக நரசிம்மப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு உள்ள யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் தேவராஜ பெருமாள் இருவரும் சுதை வடிவில் இருப்பதால் இவர்களுக்கு ஆண்டு தோறும் விண்ணுபதி புண்ணியம் காலத்தில் தைல காப்பு சாற்றி வழிபடுகின்றனர்.
வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்கள் பெருமாளை வழிபட உகந்த நாட்களாகும்.
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவர் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறைகளும் மற்ற அனைத்திலும் சிறந்த பலன் தருகிறது.
அதன்படி இன்று வைகாசி மாதம் முதல் தேதி மற்றும் ஏகாதசி விஷ்ணுபதி புண்ணியம் காலத்தை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களாக அனுமன், இராமர், கோமளவல்லி தாயார், யோக ஐயப்பன், ஆண்டாள் ஆழ்வார்களும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
சங்கு சக்கரம் கூடிய யோக நரசிம்மப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் சுவாதி கைங்கரிய குழுவினர் செய்து இருந்தனர்.