என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கைப்பந்து போட்டி
- நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டியும் நடைபெற்றது.
- போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியும், பெண்க ளுக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது.
போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
நெல்லை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப் பாளர் லில்லி வரவேற்று பேசினார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அம்பாச முத்திரம் பி.எல்.ட.பி.ஏ. மேல் நிலைப்பள்ளி மாணவி கள் முதலிடம் பெற்றனர்.
ஆவரைகுளம் பாலை மார்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடம் பெற்றனர். 17 வய துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சங்கர் நகர் கீதா கிருஷ்ணமூர்த்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலி டத்தையும், பாளையங் கோட்டை சின்மயா வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர்.
19 வயதுக்குட்பட்டோ ருக்கான பிரிவில் அம்பா சமுத்திரத்தில் உள்ள பாபநாச தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தி னர். 2-ம் இடத்தையும் பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல் நிலை ப்பள்ளி மாணவிகள் பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணி யினர் மாநில அளவி லான போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.
அவர்களுக்கான சான்றிதழ்க ளையும் வெற்றி கேடயங்களையும் கல்லூரி யின் தலைவர் லாரன்ஸ் வழங்கி, மாணவிகளின் திறனை பாராட்டி தனது வாழ்த்துக் களை தெரி வித்துக் கொண்டார்கள்.
இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்