search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம்
    X

    அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம்

    • 250 மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் புலிவலம், காட்டாற்று பாலம், கூடூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 640 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தினந்தோறும் 250 மாணவ மாணவிகளுக்கு இங்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

    மதிய உணவு உட்கொண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் மயக்கம் அடைந்துள்ளனர்.

    அதனையடுத்து மயக்கம் அடைந்த மாணவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    இதில் சௌமியா மற்றும் காவியா ஆகிய இரண்டு மாணவிகளுக்கு உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் 7ம் வகுப்பு படித்து வரும் ஜெகதீஸ்வரன் தர்ஷன் சாரநாதன் சஞ்சனா சுபலட்சுமி மாதேஷ் மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் முகேஷ் நிவாஸ் ஆகியோர் தனி வார்டில் அனுமதி க்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோ ர்களையும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, பூண்டி கலைவாணன் எம். எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இது தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×