என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் கருத்துக் கேட்பு கூட்டம்
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சா லைகளில் களப்பணியும் நடைபெறவுள்ளது.
- தொழிலாளர்களும் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலாம்.
கிருஷ்ணகிரி,
தருமபுரியில் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1948ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் பிரிவு 5ன் படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகி தங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவினை அமைத்து ஆணை பிறப்பித்தது.
அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப்-ஐ சார்ந்த மாடசாமி, சி.ஐ.டி.யூவை சேர்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி-ஐ சேர்ந்த ஜீவானந்தம், கோவில்பட்டி தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவைர் விஜய்ஆனந்த், ஆல் இந்தியா சேம்பர் ஆப் மேட்ச் இண்டஸ்ரீஸ் செயலாளர் நூர்முகமது மற்றும் சாத்தூர் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவின் கூட்டம் நாளை (8ம் தேதி) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சா லைகளில் களப்பணியும் நடைபெறவுள்ளது.
எனவே, தீப்பெட்டி தயாரி க்கும் தொழில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்களும் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக்களை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வழங்கலம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்