என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் ரத்த காயங்களுடன் வாலிபர் உடல் மீட்பு- கொலையா? போலீசார் விசாரணை
- நேற்று மாலை தட்டப்பாறை ரோட்டில் கருக் ஊரணி அருகில் உள்ள காற்றாலை சாலையில் சதீஷ் பிணமாக கிடந்துள்ளார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கம்பவுண்ட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
சதீசுக்கு மது பழக்கம் இருந்ததாகவும், இதன் காரணமாக அவரது மனைவி, குழந்தைகளும் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தட்டப்பாறை ரோட்டில் கருக் ஊரணி அருகில் உள்ள காற்றாலை சாலையில் சதீஷ் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த சதீஷின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.