search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் திறந்து வைத்தார்
    X

    அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்த காட்சி.

    தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் திறந்து வைத்தார்

    • தூத்துக்குடி 3-வது மைலில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.

    த்துக்குடி:

    தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர்- மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தூத்துக்குடி 3-வது மைலில் நடைபெற்ற நீர்,மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலை மை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து தண்ணீர் பந்தலில் இளநீர், பழவகைகள், தண்ணீர்பழம், தர்பூசணி ஜூஸ், கிர்ணி, வாழைப்பழம், வெள்ளரி, ரோஸ்மில்க், மோர் போன்ற வைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, ஒன்றிய செயலாளர் காசி ராஜன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சேகர், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர்கள் நட்டார் முத்து, சார்பு அணி செயலா ளர்கள் ராஜா, விக்னேஷ், பிரபாகர், வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முன்னாள் அரசு வக்கீல்கள் ஆண்ட்ரு மணி, சுகந்தன் ஆதித்தன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், சரவண பெருமாள், ரமேஷ் கிருஷ்ணன், சொக்கலிங்கம், வட்ட செயலாளர்கள் மனு வேல் ராஜ், முருகன், வெங்கடேஷ், மணிகண்டன், அந்தோணிராஜ், ஜெயக் குமார், மகளிர்கள் இந்திரா, சாலினி, ராஜேஸ்வரி, ஸ்மைலா, முல்லையம்மாள், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×