என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் அரசு பள்ளியில் நலத்திட்ட உதவிகள் - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
- சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளிக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கினார்.
தொடர்ந்து ஓட்டபயிற்சி மேற்கொள்ளும் மாணவி களுக்கு ஷூக்கள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் நுழைந்துள்ள ஊத்துமலையை சேர்ந்த மாணவி கலைச்செல்விக்கு ஸ்டெதஸ்கோப் மறற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்று சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் மாவட்ட துணைச்செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அணி கார்த்தி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் சங்கர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், நகர துணைச் செயலாளர்கள் சுப்புத்தாய், முத்துக்குமார் வார்டு செயலாளர் பழனிச்சாமி, காவல் கிளி, ஜான், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.