search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக எடையிலான புத்தகப்பையை தோளில் சுமப்பதால் உடல் நலம் பாதிக்காமல் இருக்க என்ன செய்வது?
    X

    அதிக எடையிலான புத்தகப்பையை தோளில் சுமப்பதால் உடல் நலம் பாதிக்காமல் இருக்க என்ன செய்வது?

    • டாக்டர் தரும் ஆலோசனை
    • பாட புத்தகங்களின் சுமையை குறைக்க கால அட்டவணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

    கோவை,

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பெற்பொறோர் கவனிக்க வேண்டிய சில விசயங்கள் குறித்து கோவை சரவணம்பட்டி சக்தி ரோட்டிலுள்ள ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் டாக்டர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:-

    பள்ளி மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவின் முதுகு எலும்பு. அவர்களது முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகு வலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வலைவு ஆகிய உடல் நல பாதிப்புகள் உண்டாகிறது.

    தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.

    மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தல் படி தோள் பையின் எடை உடலின் எடையிலிருந்து அதிகபட்சம் 10 சதவீதத்திற்குள் தான் இருக்க வேண்டும். அதாவது 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு 1.5 கிலோவுக்குள், 3 முதல் 5 -ம் வகுப்பு வரை 3 கிலோவுக்குள், 6 முதல் 8 வகுப்பு வரை 4 கிலோவுக்குள்,8 மற்றும் 9-ம் வகுப்புக்கு 4.5 கிலோவுக்குள், 10 முதல் 12 -ம் வகுப்பு வரை 6 கிலோவுக்குள் தோள் பையின் எடை இருக்க வேண்டும்.

    பற்றோர்கள் தோள் பை கடைகளில் வாங்கும் போது தோளில் மாட்டும் பகுதி பட்டையாக உள்ளதா, இடுப்பு பகுதியை இணைக்கும் பட்டையுள்ளதா, புத்தகத்தை தனித்தனியாக பிரித்து வைக்கும் வகையில் அதிக அளவில் அறைகள் உள்ளவா என பார்த்து வாங்க வேண்டும்.

    அதேபோல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தேவையில்லாத புத்தகங்களை தவிர்ப்பதன் முலம் தோள் பையின் எடையை குறைக்கலாம். அதிக எடையுடைய புத்தகத்தை நடு முதுகு பகுதியில் படும்படியுள்ள பையின் அறையில் வைக்க வேண்டும்,

    மற்ற புத்தங்களை அதன் எடைக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த அறைகள் வைக்க வேண்டும். பையின் பட்டை இரண்டு தோள்களிலும் சரியான உயரத்தில் உள்ளதா, இடுப்பு பகுதியின் பட்டை சரியாக மாட்டபட்டுள்ளதா என சரிபாக்க வேண்டும்.இரண்டு தோள்களிலும் தோள் பையை மாட்டி மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அன்றைய அனைத்து வகுப்பு பாடங்களையும் ஒரே புத்தகத்தில் எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

    பாட புத்தகங்களின் சுமையை குறைக்க கால அட்டவணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பள்ளி நிர்வாகம் மாணவர்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர் சரியான முறையில் சுத்திகரித்து தர ஏற்பாடு செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பள்ளியிலே வழங்குவதன் மூலம் மாணவர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து வருவதை தடுக்கலாம்.

    இதன் மூலம் தோள் பை யின் எடையை குறைக்கலாம்.

    அதே போல் ஓவ்வொரு மாணவருக்கும் அவர்கள் புத்தகங்களை பள்ளியிலேயே வைத்து பாதுகாப்பு கொள்ள புத்தக பாதுகாப்பு பெட்டி ஏற்படுத்தி கொடுக்கலாம். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரது ஒத்துழைப்பினால் மட்டுமே மாணவர்களுக்கு தோள் பையின் எடையை குறைத்து அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தடுக்க முடியும். அதேபோல் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் உடலில் அக்கறை கொண்டு மருத்துவ முகாம்கள், மருத்துவ கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து தர முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×