என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாண்டிக்குடி பகுதியில் உலா வரும் ஒற்றை யானை
- வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கேசி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் தாண்டிக்குடி முருகன் கோவில் கடுகுதடி பகுதியில், கடந்த 5 நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது. இந்த காட்சி, போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் பிறகு கல்லார் காப்பு காட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்து வத்தலகுண்டு வனவர் முத்துக்குமரன் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.