என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் வன விலங்குகள் பாதுகாப்பு வாரம் கொண்டாட்டம்
- நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவ, மாணவிகள் விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தென்காசி:
தேசிய வன விலங்குகள் வாரத்தினை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஒவ்வொரு நாளும் வன விலங்குகள் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகள் குறித்து விளக்கம் அளித்தும், வன விலங்குகள் போல வேடமணிந்தும், விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
விலங்குகள் பற்றிய வினாடி-வினாவும் கேட்கபட்டது. மேலும் விலங்குகள் பாதுகாப்பதின் முக்கிய பங்கினை பற்றி கருத்துரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.