search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டலாடி- ஆண்டித்தோப்பு சாலை சீரமைக்கப்படுமா?
    X

    பழுதடைந்த நிலையில் உள்ள சாலை.

    கட்டலாடி- ஆண்டித்தோப்பு சாலை சீரமைக்கப்படுமா?

    • சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கட்டலாடியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைகளுக்கு கட்டலாடியிலிருந்து ஆண்டிதோப்பு வழியாக திருமருகல் வரும் சாலை உள்ளது.

    இந்த சாலையை கட்டலாடி பொதுமக்கள் கடைத்தெரு, ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், வேளாண்துறை அலு வலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வங்கி, பொதுப்பணித்துறை அலுவலகம், பஸ் நிலையம் என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாலையில் இருபுறமும் செடி,கொடிகள், நாணல், கருவேல மரங்கள் வளர்ந்து பழுதான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    Next Story
    ×