என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசு பஸ்சின் பின்பக்க டயரில் சிக்கி பெண் பலி
- சிவப்பு நிற பஸ்சின் பின்பக்க டயர் சைலஜாவின் தலையில் ஏறி இறங்கியது.
- நடுரோட்டில் சைலஜா வின் உடல் கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை:
பாளை டி.வி.எஸ். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது65).இவரது மனைவி சைலஜா (62).
பஸ் மோதி விபத்து
இவர்கள் 2 பேரும் சேரன்மகாதேவி அருகே உள்ள இடையன்குளத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை மொபட்டில் நெல்லை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.
வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற அரசு விரைவு பஸ் புதிய பஸ் நிலையத்துக்குள் திரும்பியது. இதனால் சோமசுந்தரம் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.
பெண் பலி
அப்போது பின்னால் அமர்ந்திருந்த சைலஜா தடுமாறி பின்பக்கமாக ரோட்டில் சாய்ந்தார். அப்போது அவர்களுக்கு வலது புறமாக சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலை யத்துக்கு வந்த சிவப்பு நிற பஸ்சின் பின்பக்க டயர் சைலஜாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சோமசுந்தரத்திற்கு காயம் ஏற்பட்டது. மனைவி உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
நடுரோட்டில் சைலஜா வின் உடல் கிடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சைலஜா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் சோமசுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த சைல ஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மகன் வினோத்குமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.