என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது மாடியிலிருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை
- கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஐ.டி. என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்போரூர்:
சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் போரூர் சி.எல்.எப். பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த மதுமொழி (33) என்ற பெண்ணை 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த மதுமொழி செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவரது தங்கை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று தங்கை குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஐ.டி. என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடைந்த மதுமொழி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் ஐ.டி. பெண் என்ஜினீயர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.