என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரணியில் சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி அலுவலக பணியாளர்களை மிரட்டிய பெண்
- ஆரணி பேரூராட்சியில் 80 சதவிகித சொத்துவரி மட்டுமே வசூல் ஆகி உள்ளது.
- நாகலட்சுமி என்பவர் பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்தாராம்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் பணியாளர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு,வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 80 சதவிகித சொத்துவரி மட்டுமே ஆரணி பேரூராட்சியில் வசூல் ஆகி உள்ளது. மீதம் உள்ள 20 சதவிகித சொத்து வரியை வசூலிக்க பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று கேட்டு வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகலட்சுமி(வயது37) என்பவர் வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கேட்டார்களாம். அந்தப் பணியாளர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்து விட்டீர்கள்! என்று தகாத வார்த்தைகளால் திட்டினாராம். மேலும், பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்தாராம். இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் நாகலட்சுமி மீது பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இப்பிரச்சனை இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.