search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ஆலைகளில் வேலை செய்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
    X

    சேலம் ஆலைகளில் வேலை செய்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

    • செங்கல்‌ சூளை மற்றும்‌ மரம்‌ அறுக்கும்‌ ஆலையில்‌ பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர்‌ மற்றும்‌ வளரிளம்‌ பருவத்‌ தொழிலாளர்கள்‌ கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.
    • தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்‌நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் மாவட்ட ஆள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறை, சைல்டு லைன் கள அலுவலர்கள், காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராமிய பெண்கள் மேம்பாட்டு சமூக ஆர்வலர் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் தைலானூர் வலசையூர், சின்ன வீராணம் மற்றும் குப்பனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கொத்தடிமை தொழிலாளர், குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உள்ளனரா என்று அதிரடி ஆய்வு செய்தனர்.

    மேலும் செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள்

    கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆய்வின் போது அரிசி ஆலை உரிமையாளர்கள், செங்கல் சூலை மற்றும் மரம் அறுக்கும் ஆலை உரிமை யாளர்களிடம் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் எவரையும் தொழிற்கூடங்களில் பணியமர்த்த கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. நிர்வாகத்தினரிடம் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தி னர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவன ங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும் என்றும் எச்சரிக்கை செய்யப்ப ட்டது.

    மேலும் குழந்தை களை பணி செய்ய அனுப்பி வைக்கும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×