search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல திட்டங்கள் பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    நல திட்டங்கள் பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

    • அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • தொழி லாளர்களிடம் இருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி ஆகும்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழி லாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு பிரிகே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு உதவித்தொகை, 10, 12-ம் வகுப்புகளுககு மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவிலான விளையாட தகுதி பெறுபவர்களுக்கு விளையாட்டு உதவித்தொகை,

    மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்கியதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த திட்டங்களில் பய னடைய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடி ப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தொழி லாளர்களிடம் இருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி ஆகும்.

    மேலும் விண்ணப் பங்களை செயலாளர் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரி யிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.

    Next Story
    ×