search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே வெங்காய சாகுபடியில் தொழிலாளர்கள் தீவிரம்
    X

    வெங்காய அறுவடையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    வடமதுரை அருகே வெங்காய சாகுபடியில் தொழிலாளர்கள் தீவிரம்

    • வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் விவசாயிகள் தக்காளி மற்றும் வெங்காயம், பணப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • பெரிய சால்கள் அமைத்து வெங்காயத்தை பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வடமதுரை :

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் விவசாயிகள் தக்காளி மற்றும் வெங்காயம், பணப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். ஒரு சில கிராமங்களில் தக்காளியை குப்பையில் கொட்டிச்செல்லும் அவலநிலையும் ஏற்பட்டது. இதனிடையே வெங்காயம் தங்களுக்கு போதிய வருமானத்தை கொடுக்கும் என்று ஏராளமான விவசாயிகள் வெங்காய சாகுபடி செய்திருந்தனர்.

    இப்பகுதியில் நல்ல மழை பெய்தபோதும் வெங்காயத்திற்கும் போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது விவசாயிகள் வெங்காய அறுவடை பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அறுவடை செய்த வெங்காயத்தினை சால் அமைத்து பதப்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. நல்ல விலை கிடைக்கும் போது விற்கலாம் என நம்பி பெரிய பெரிய சால்கள் அமைத்து பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×