search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களை  கருணையோடு அணுக வேண்டும்-  அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்
    X

    தொழிலாளர்களை கருணையோடு அணுக வேண்டும்- அமைச்சர் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்

    • மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்தார்.
    • சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களைக் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி-கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, எத்தனை மருத்துவர்கள் பணியில் உள்ளனர், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என ஆய்வு செய்ததோடு, அவர்களின் வருகைப் பதிவேடுகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவத்தின் செயல்பாடு, மருந்துகள் இருப்பு குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மருந்தகத்தை சுற்றிலும் புதர் மண்டி கிடந்தது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மருந்தகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தொழிற்சாலைகளில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் மூலம் மருந்துகள் முறையாக வழங்கப்படுகிறதா, முறையான சிகிச்ைச அளிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில், பொள்ளாச்சி இ.எஸ்.ஐ. மருந்தகத்தை ஆய்வு செய்துள்ளேன்.

    மருத்துவர்கள், பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில் அவர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வந்துள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மூலம் தொழிலாளர்களுக்குப் போதுமான சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.

    சிகிச்சைக்கு வரும் தொழிலாளர்களைக் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும். நீண்டநேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகம்தான் மருத்துவ சேவையில் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, சப்-கலெக்டர் பிரியங்கா, பொள்ளாச்சி நகரசபை தலைவி சியாமளா நவநீதகிரு ஷ்ணன், தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×