search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை வீரமாணிக்கபுரத்தில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு விடுதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்
    X

    பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியை கலெக்டர் கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    பாளை வீரமாணிக்கபுரத்தில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு விடுதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

    • தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.
    • பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமை யில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.

    மகளிர் விடுதிகள்

    இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

    மேலும் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.

    முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

    இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பாளை வீரமா ணிக்கபுரத்தில் புதுப்பிக்க ப்பட்ட மகளிர் விடுதியை இன்று காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையொட்டி நெல்லை யில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.

    கலந்து கொண்டவர்கள்

    தொடர்ந்து மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டவர்கள் குத்து விளக்கு ஏற்றினர். மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் பொன்மு த்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விடுதியில் சுத்திகரிக்க ப்பட்ட குடிநீர்வசதி, பாதுகாப்பு வசதி, பொழுதுபோக்கு அறை என பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்ப ட்டுள்ளது. வீரமாணிக்கபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதி ரூ. 45.54 லட்சத்தில் கட்டி முடிக்க ப்பட்டுள்ளது. இவ்விடுதி 60 படுக்கை வசதியுடன் இருவர், நால்வர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    முன்பதிவு

    மேலும் www.tnwwhclin என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்க ளில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பபட்டுள்ளது.

    Next Story
    ×