என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூரில் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
- உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூர் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமில் சிறப்பு அம்சமாக கண் விழித்திரை பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, நுரையீரல் திறன் பரிசோதனை, உடல் பருமன் குறைக்க உணவு முறை ஆலோசனை, எலும்பு வலிமை பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றன
வள்ளியூர்:
உலக சர்க்கரை நோய் விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூர் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அன்னை அமராவதி மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முகாமை நடத்தின. விழாவின் தொடக்கமாக டாக்டர் சங்கரன், வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும், மேக்ரோ கல்லூரி நிறுவனத்தின் தலைவருமான பொன் தங்கதுரை ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினர்.
டாக்டர் சங்கரன் சிறப்புரை ஆற்றினார். ரோட்டரி முன்னாள் ஆளுநரும், கிங்ஸ் பள்ளியின் தாளாளருமான ரோட்டரியன் நவமணி மற்றும் வள்ளியூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தலைவர் பொன் தங்கதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின்போது பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொன் தங்கதுரை, செயலர் சுதிர் கந்தன், முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் வலங்கை புலி ரமேஷ், முன்னாள் தலைவர் முத்து சுபாஷ், செல்வேந்திரன், ஜெய்கணேஷ், முத்துசாமி, ஹரிஷ், முன்னாள் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சிறப்பு அம்சமாக கண் விழித்திரை பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, நுரையீரல் திறன் பரிசோதனை, உடல் பருமன் குறைக்க உணவு முறை ஆலோசனை, எலும்பு வலிமை பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் டாக்டர்கள் பயனாளி களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.
ஒவ்வொரு பரிசோதனை கருவிகளும் தனித்தனியே அமைக்கப்பட்டு அத்தனை பயனாளிகளுக்கும் சுதந்திரமாக இலவசமாக பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முகாமில் 142 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில் புதிதாக 64 சர்க்கரை நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும், சத்து பலகாரமும், சத்தான பானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் சங்கரன், டாக்டர் அருண் பிரகாஷ், டாக்டர் அசோக் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இந்த முகாமில் முன்னாள் வியாபாரி சங்க தலைவர் சின்னத்துரை, நிர்வாக கமிட்டி உறுப்பினர் சங்கரன், வியாபாரி சங்க பொருளாளர் ஜோவின், மெர்சி பள்ளியின் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த முகாமின் முழு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் சங்கரனை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும், மேக்ரோ கல்லூரியின் சேர்மன் பொன் தங்கதுரை மற்றும் செயலர் சுதீர் கந்தன் ஆகியோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்