என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆதித்தனார் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு தின விழா
- இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து கல்லூரி முதல்வர் மகேந்திரன் விளக்கி கூறினார்.
- விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், உலக இயற்கை பாதுகாப்பு தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நிலம், நீர், காற்று, ஆகாயம் மாசுபடாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கி கூறினார். கல்லூரி வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்தினர்.
பேராசிரியர்கள் சாந்தி, வசுமதி, கவிதா, சிவக்குமார், திலீப்குமார், கருப்பசாமி, கொளஞ்சிநாதன், பார்வதிதேவி, திருச்செல்வன், பெனட், சுமதி, ரூபன் ஜெசு அடைக்கலம், கரோலின் கண்மணி, ஸ்வீட்லின் டயானா, சிங்காரவேலன், ஆன்டனி பிரைட்ராஜா, தேசிய மாணவர் படை அலுவலர் சிவமுருகன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மருதையா பாண்டியன், சத்தியலட்சுமி, சுற்றுச்சூழல் இயக்கத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உள்தர உறுதிப்பிரிவின் உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் செய்து இருந்தார்.