search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூகத்தை ஒன்றிணைக்க யோகா உதவுகிறது - மத்திய இணை மந்திரி பேட்டி
    X

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் யோகாசனம் நடைபெற்றது.

    சமூகத்தை ஒன்றிணைக்க யோகா உதவுகிறது - மத்திய இணை மந்திரி பேட்டி

    • நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை யும் ஒருங்கிணைக்கதூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது.
    • யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதில் உள்ள சஞ்சலத்தை, பிரம்மையை அகற்றி, மனதிற்கு தெளி வை ஏற்படுத்தவும் பயன்படுகிறது.

    தஞ்சாவூர்:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை மத்திய இணை மந்திரி அன்னபூர்ணா தேவி தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் பேசியாதாவது:-

    நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை யும் ஒருங்கிணைக்கதூண்டு தலாகவும், உந்துசக்தி யாகவும் விளங்குகிறது என்றார். பண்பாட்டு சிறப்பு மிக்க தஞ்சாவூர் பெரிய கோயில் பின்னணியில் பெரும் திரளான மாண வர்கள் உள்ளிட்ட அனைவ ருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளித்தது.

    யோகாவை உட ற்பயி ற்சியாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதில் உள்ள சஞ்சலத்தை, பிரம்மையை அகற்றி, மனதிற்கு தெளி வை ஏற்படுத்தவும் யோகா பயன்படுகிறது என்று அமைச்சர் குறிப்பி ட்டார். நமது கடமையை, செயல்பாட்டை திறமையுடன் அறிவுபூர்வமாக நிறைவு செய்ய பயன்படுவது யோகா.

    சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு முன்முயற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சார்பில் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து க்கள்.இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன், உணவு பதன தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தி ன் இயக்குனர்டாக்டர் லோகநாதன், கிருஷ்ண மாச்சாரியா யோக மந்திரத்தின் யோகாச்சா ரியார் ஸ்ரீதரன், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்பா ர்வையாளர் டாக்டர் ராமகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×