search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்
    X

    வேலூரில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லபடுவதை தடுக்கும் பொருட்டு நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரவாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காட்பாடி வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரசாத் (வயது 44) என்பதும் காண்ட்ராக்ட் தொழில் செய்வதும் தெரியவந்தது.

    தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர்.  #LSPolls

    Next Story
    ×