என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி ஏழை விவசாயியோடு உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? - ராகுல்
Byமாலை மலர்12 April 2019 4:34 PM IST (Updated: 12 April 2019 4:34 PM IST)
பிரதமர் மோடி ஏழை விவசாயியோடு உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டியில் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
டெல்லியில் உள்ள அதிகாரிகள் தமிழ் மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்தியாவை வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழகத்தின் குரல் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாங்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூடிய அறையில் தயாரிக்கப்பட்டது அல்ல, பல்லாயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே தயாரிக்கப்பட்டது.
அனிதாவுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றொருவருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்து கொள்ளலாம். மக்களின் குரலை கேட்கிறோம், கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம்.
கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார். தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நாட்டில் உள்ள 20% ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.
விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு சொல்லக்கூட பிரதமருக்கு மனமில்லை. விவசாயிகளை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்பதற்குகூட பிரதமருக்கு நேரமில்லை. பிரதமர் மோடி, ஏழைகளோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை கூட பார்த்திருக்க முடியாது.
மத்திய அரசு அலுவலக பணிகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்வோம். கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி இளைஞர்களை ஏமாற்றி வந்தார் என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X