search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை  3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
    X

    திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரை அதிமுக வேட்பாளரை சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சிஎன் அண்ணாதுரையும், அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நேருக்குநேர் மோதினார்கள். இதில் அண்ணாதுரை 6 லட்சத்து 66 ஆயிரத்து 272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3 லட்சத்து 62 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 3,04,187 ஆகும்.

    மக்கள் நீதி மய்யம் 14654 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 27503 வாக்குகளும், அமமுக 38639 வாக்குகளும் பெற்றனர்.
    Next Story
    ×