search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    நா காக்க நலம்!
    X

    நா காக்க நலம்!

    • கவரிமான் தன் வாலில் உள்ள முடிகளை இழந்து விட்டால் அது உயிர் வாழாது.
    • நீரில் வாழும் நண்டு, குஞ்சுகளை ஈன்றவுடன் குஞ்சுகளுக்கே இரையாகிப் போகுமாம்

    சிலந்திப் பூச்சியின் முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிப்பட்டவுடன், அந்த குஞ்சுகள் எல்லாம் சேர்ந்து தாய் பூச்சியைக் கடித்துத் தின்றுவிடுமாம். இங்கு சிலந்தியின் உயிருக்கு அதன் முட்டையே கூற்றமாக அமைகிறது.


    கலைமான், கடமான், காட்டெருமை போன்ற விலங்குகளின் நீண்டு வளர்ந்த கொம்புகள் கானகத்தில் புதர்களிடையே சிக்கிக் கொள்வதால், அதிலிருந்து விடுபட முடியாமல், பட்டினி கிடந்தோ அல்லது புலி, சிறுத்தை போன்றவற்றால் தாக்கப்பட்டோ உயிரைவிட நேர்கிறது. இங்கு அந்த விலங்குகளின் நீண்ட கொம்புகளே அவற்றுக்குக் கூற்றம் ஆகிறது.


    கவரி மான் தன் வாலில் உள்ள முடிகளை இழந்து விட்டால், அது உயிர் வாழாது; இங்கு, அதன் வால் முடியே அதற்கு கூற்றம் ஆகிறது.


    நீரில் வாழும் நண்டு, குஞ்சுகளை ஈன்றவுடன், அந்த குஞ்சுகளுக்கே இரையாகிப் போகுமாம்; இங்கு நண்டுக்கு அதன் குஞ்சுகளே கூற்றமாகிப் போகிறது.


    ஒரு மனிதன், மற்றவர்களைப் பற்றி வரை முறையின்றி வசை மொழிகளைக் கூறினால், அந்த வசைமொழிகள் அவன்மீது கடும் பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, இறுதியில் அவன் உயிருக்கே தீங்காக முடிந்து விடுகிறது. இங்கு அவனது நாவே அவனுக்குக் கூற்றமாக அமைந்து விடுகிறது என்கிறது சிறுபஞ்சமூலம் என்கிற அறநூல்.

    "சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்; நீள்கோடு

    விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம்படா

    மாவிற்குக் கூற்றம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு;

    நாவிற்கு நன்றல் வசை !"

    -வை,வேதரெத்தினம்

    Next Story
    ×