search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பேஜாரு பண்ணாதே..!
    X

    பேஜாரு பண்ணாதே..!

    • சென்னை ரிக்ஷாக்காரர்கள் பல ஆங்கிலச் சொற்களை தமிழுக்கு கொண்டு வந்தனர்.
    • இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்கள்.

    "பேஜாரு "- வார்த்தை எப்படி வந்தது?

    சென்னை ரிக்ஷாக்காரர்கள் பல ஆங்கிலச் சொற்களை தமிழுக்கு கொண்டு வந்தனர்.

    அவற்றில் ஒன்று தான் பேஜாரு.

    அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை,

    இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்பாய் படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

    இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள்

    don't badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லித் தவிர்த்து இருக்கின்றார்கள்.

    வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ, நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள்.

    - இந்திரன் ராசேந்திரன்

    Next Story
    ×