search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அதை வைத்து என்ன செய்வாய்?
    X

    அதை வைத்து என்ன செய்வாய்?

    • நாம் அனைவரும் சமைப்பது எப்படி என்கின்ற நம்முடைய புத்தகத்தை வைத்திருக்கிறோம்.
    • மனம்தான் நமது சமையல் கலை புத்தகம்.

    ஒருநாள் முல்லாவின் நண்பர், அவரிடம் கொஞ்சம் இறைச்சியும், அதோடு அதை சமைப்பது எப்படி என்கின்ற சமையல் கலை புத்தகத்தையும் கொடுத்தார்.

    முல்லா மிகவும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ஒரு பெரிய பருந்து ஒன்று முல்லாவின் கையில் இருந்த இறைச்சியைக் கொத்திக்கொண்டு போய்விட்டது.

    முல்லா அந்த பருந்தைப் பார்த்து..

    "நீதான் மிகவும் புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளாதே..

    நீ ஒரு முட்டாள்..

    நீ இந்த இறைச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்..?

    அதைச் சமைப்பது எப்படி என்கிற புத்தகம் என்னிடமல்லவா உள்ளது.

    இந்த சமையல் கலை புத்தகம், நீ பறித்துச் சென்ற இறைச்சியை விட மிகவும் முக்கியமானது.

    எனவே அந்த இறைச்சியை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் முட்டாளே..

    எப்படி சமைப்பது என்கிற புத்தகம் இன்னமும் என்னிடம்தான் உள்ளது." என்று கூறினார்.

    நாம் அனைவரும் சமைப்பது எப்படி என்கின்ற நம்முடைய புத்தகத்தை வைத்திருக்கிறோம்.

    அதுதான் நாம் கற்றறிந்த அறிவு..

    மனம்தான் நமது சமையல் கலை புத்தகம்...

    அது எப்போதும் நம்முடன் இருக்கிறது.

    ஆனால் வாழ்க்கையோ நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.

    அந்த சமையல் புத்தகம் மட்டுமே உள்ளது!.

    - ஓஷோ

    Next Story
    ×