search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    உலகம் பலவிதம்!
    X

    உலகம் பலவிதம்!

    • நைஜீரியாவில் பல பழங்குடிகள் உண்டு.
    • கல்யாணத்துக்கு முன் வேண்டா வெறுப்பாக தழும்பு போட்டுக்கொள்வார்கள்.

    மற்ற நாடுகளில் பல் வரிசை சீராக இருக்கவேண்டும் என சொல்லி பல் மருத்துவரிடம் போய் கம்பி கட்டிக்கொண்டு பல்லை சீர்படுத்திக்கொண்டு வருவார்கள்.

    ஆனால் ஜப்பானில் பெண்களுக்கு தெற்றுப்பல் இருந்தால் தான் அழகு என்ற கருத்தாக்கம் உண்டு.

    தெற்றுப்பல் தான் இயற்கை, இளமை, குறும்புத்தனம் என ஜப்பானில் சொல்கிறார்கள். இந்த ஸ்டைலை "யயேபா (Yaeba)" என சொல்வார்கள். பல்வரிசை சீராக இருக்கும் ஜப்பான் பெண்கள் போலி பற்களை பொருத்திக்கொண்டு பல்லை தெற்றுப்பல் ஆக்கிகொள்வது உண்டு. சிலர் டென்டிஸ்டிடம் போய் அறுவை சிகிச்சை எல்லாம் செய்து நல்ல பல்லை தெற்றுப்பல் ஆக்கிக்கொள்வார்கள்.

    இரானியர்களுக்கு அது போல மூக்கு மிக முக்கியம். பல இரானியர்களுக்கும் மூக்கு புடைப்பாக இருக்கும். அதை நேராக, சீராக, சின்னதாக ஆக்கிக்கொள்ள மெனகெடுவார்கள். உலகின் மூக்கு சர்ஜரியில் முதலிடத்தில் இருக்கும் நகரம் டெஹ்ரான் தான். மூக்கு சர்ஜரி செய்தபின் மூக்கின் மேல் பிளாஸ்திரி ஒட்டிக்கொள்வது இரானில் ஸ்டேட்ஸ் சிம்பல். ஏழைகள் சர்ஜரி செய்யாமலே மூக்கில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வருவதுண்டு.

    யூதர்களுக்கும் அதேபோல கூர் மூக்கு தான். ஆனால் "கூர் மூக்கு" என்பது யூதர்களை ஸ்டிரியோடைப் செய்ய பயன்படுத்தப்பட, கூர் மூக்குடன் பிறக்கும் யூதர்கள் சில சர்ஜரி செய்து அதை சரிப்படுத்திக்கொள்வதும் வழக்கம்.

    நைஜீரியாவில் பல பழங்குடிகள் உண்டு. ஒருவர் இன்ன இனம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதனால் பிறந்தவுடன் அந்த இனத்தின் அடையாளத்தை முகத்தில் கீறலாக போட்டு, தழும்பு வரும்படிக்கு செய்துவிடுவார்கள். சாலையில் போனாலே "இவன் இன்ன இனம்" என கண்டுபிடித்துவிடலாம். நகரத்தில் பிறந்து தழும்பு போடாமல் எஸ்கேப் ஆகிறவர்களுக்கு பெண் கிடைக்காது. சிலர் கல்யாணம் ஆகவேண்டுமெனில் தழும்பு போட்டே ஆகவேண்டும் என்பதற்காக, கல்யாணத்துக்கு முன் வேண்டா வெறுப்பாக தழும்பு போட்டுக்கொள்வார்கள்.

    மூக்கு, பல்லு, சூடுன்னு என்ன கொடுமை இது எல்லாம்? ஆண்டவன் நம்மை எப்படி படைச்சானோ, அப்படியே இருக்கலாம்னு பலருக்கும் தோன்றுவது இல்லை!

    -நியாண்டர் செல்வன்

    Next Story
    ×