search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அங்கும் இங்கும்
    X

    அங்கும் இங்கும்

    • வீட்டுக்கு அருகில் உள்ள அந்த பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கூடத்தில் தான் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.
    • கல்வி என்பது ஆறாம் வயதில் இருந்து தான் அங்கு அளிக்கப்படுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் இரண்டு வயது முடியும் முன்னதாகவே கிண்டர்கார்டன், லோயர் கார்டன், அப்பர் கார்டன் என்று சொல்லக் கூடிய அளவிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டு பிள்ளைகளை பாடாய் படுத்துகிறார்கள்.

    இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேரலாம், படிக்கலாம். அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. தனியார் பள்ளிகள் ஏராளம் ஏராளம் .

    ஆனால் அமெரிக்காவில் எங்கு குடியிருக்கிறோமோ அங்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் மட்டும் தான் சேர்க்க முடியும்.

    நம் விருப்பப்படி வேற பள்ளியில் சேர்க்கவே முடியாது. வீட்டுக்கு அருகில் உள்ள அந்த பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கூடத்தில் தான் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.

    மேலும் ஆறு வயது ஆனால் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள். 6 வயதிற்கு முன்னதாக எந்தப் பிள்ளையையும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவே மாட்டார்கள் .

    கல்வி என்பது ஆறாம் வயதில் இருந்து தான் அங்கு அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டு விட வேண்டும். அவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் அந்த வயதிற்கு உரியது என்று ஆறாம் வயது வரை எந்த பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

    எவ்வளவு வித்தியாசம் பாருங்கள் நமக்கும் அவர்களுக்கும். பிள்ளைகள் மீது அந்த அக்கறை அரசுக்கும் இருக்கிறது; பெற்றோர்களுக்கும் இருக்கிறது; ஏன் அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது .

    அதனால்தான் அவர்கள் அங்கு உள்ள பிள்ளைகள் படிப்பு நல்ல விதமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கிறது. இங்கு உள்ள பிள்ளைகளின் படிப்பு இருக்கிறது. ஆனால் பிள்ளைப் பிராய இன்பத்தை எந்தப் பிள்ளைகளும் அனுபவிப்பதே இல்லை.

    -கருணாமூர்த்தி

    Next Story
    ×