search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    சம்சாரியின் தீபாவளி!
    X

    சம்சாரியின் தீபாவளி!

    • போன தீபாவளிக்கு அஞ்சு வட்டிக்கு வாங்கிய ஐயாயிரம் பத்தாயிரமாய் வளர்ந்து.
    • கடன்காரர்களுக்கு காரணம் சொல்லி காரணம் சொல்லியே அம்சமாய் இருந்த மனைவி இன்று- அரைக் கிழவியாகி_நிற்பாள் ....!

    அரைப்பாவாடையுடன்

    ஓடியாடிய குழந்தை

    திடுமென வளர்ந்து

    ஆளாகி நிற்பதுபோல்

    போன தீபாவளிக்கு

    அஞ்சு வட்டிக்கு

    வாங்கிய ஐயாயிரம்

    பத்தாயிரமாய் வளர்ந்து-

    பயமுறுத்தும்....!

    கடன்காரர்களுக்கு

    காரணம் சொல்லி

    காரணம் சொல்லியே

    அம்சமாய் இருந்த

    மனைவி இன்று-

    அரைக் கிழவியாகி _

    நிற்பாள் ....!

    யமக் கிங்கரர்களாய்

    கனவிலும் வந்து

    பயமுறுத்தும்

    பால்காரன்

    பேப்பர்காரன்

    கடைக்காரன்

    கூடவே.....

    கைமாத்து கொடுத்த-

    கடன்காரன்.........!

    கடனாளியால்

    கதவடைத்து

    உள்ளிருந்தாலும்

    கட்டாயம் வந்து விடுகிறது

    மாதத்தில் இருமுறையேனும்

    உறவுக்காரர் திருமணம்

    இரண்டும்...

    ஊர்த்திருவிழாவுக்கு

    நன்கொடைகேட்கும்

    அழைப்பிதழ்-

    ஒன்றும்........!

    வலிகளும் இரணங்களும்

    வலைவிரித்துக்

    காத்திருந்தாலும்

    தீபாவளி என்னும்

    ஒற்றைநாளில்

    மலர்ந்து விடுகிறது

    உலர்ந்து கிடந்த-

    வாழ்க்கை.......!

    அசராமல் மறுபடியும்

    பத்துவட்டிக்கு

    கடன்வாங்கி

    பண்டிகையை

    எதிர்நோக்குகையில்

    மூத்தபெண்

    ஆளான சேதியோடு

    முறைசெய்ய வரச்சொல்லி

    அழைப்பு வரும்-

    தங்கையிடமிருந்து....!

    குறிப்பிட்ட தேதிக்குள்

    தவணைத்தொகை

    கட்ட சொல்லி

    கோர்ட்டிலிருந்து

    நோட்டிஸ் வரும்..!

    கைமாத்து

    கொடுத்த நண்பன்

    கதவுக்கு

    வெளியே நிற்பான்..!

    மறுநாள் முதல்

    தொடரப்போகும்

    மாயப்பிசாசுகளை

    மறந்து..

    ஒருநாளாவது

    இருப்போமே-

    இன்பமுடன்......!

    -அழ. இரஜினிகாந்தன்

    Next Story
    ×