search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பெண்களின் கண்டுபிடிப்பு!
    X

    பெண்களின் கண்டுபிடிப்பு!

    • நாம் பயன்படுத்தும் டிஷ் வாஷர் கருவியை கண்டுபிடித்தவர் ஜோசப்பின் கோக்ரேன் என்ற பெண்.
    • மின்சார காபி ஃபில்டரை மெலிட்டா பென்ஸ் என்ற பெண் கண்டுபிடித்தார்.

    நாம் இன்று சமையலறைகளில் பயன்படுத்தும் மிக்சியை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த உஷா மாதுர் என்ற பெண்மணி. அவரும் கணவர் சத்ய பிரகாஷ் மாதுரும் இணைந்து "சுமீத்" என்ற பிராண்டை சர்வதேச அளவுக்கு உயர்த்தினார்கள்.

    நாம் பயன்படுத்தும் வாஷிங் மிஷினில் துணிகளைப் பிழியும் தொழில்நுட்பத்தை எல்லன் எக்லின் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி கண்டுபிடித்தார்.

    நாம் பயன்படுத்தும் டிஷ் வாஷர் கருவியை கண்டுபிடித்தவர் ஜோசப்பின் கோக்ரேன் என்ற பெண்.

    நாம் இன்று சமையலறையில் பரவலாக பயன்படுத்தும் மின்சார குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்தவர் பிளாரன்ஸ் பர்பார்ட் என்ற பெண் (தெரு கூட்டும் கருவியும் இவர் கண்டுபிடித்ததே!).

    நாம் துணிகளை இஸ்திரி செய்ய பயன்படுத்தும் அயர்ன் போர்டை கண்டுபிடித்தவர் சாரா பூன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி.

    மின்சார காபி ஃபில்டரை மெலிட்டா பென்ஸ் என்ற பெண் கண்டுபிடித்தார்.

    இன்றைய சிசிடிவிகளுக்கு எல்லாம் முன்னோடி ஹோம் செக்யூரிட்டி சிஸ்டம் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணான மேரி வான் பிரிட்டன் பிரவுன் கண்டுபிடித்தது.

    ஐஸ்கிரீம் செய்யும் கருவியை கண்டுபிடித்தவர் நான்சி ஜான்சன் என்ற பெண்மணி.

    -நிவேதா லூயிஸ்

    Next Story
    ×